சமனில் முடிந்தது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் அயர்லாந்து சீன அணிகள் இடையேயான ஆட்டம்

Home

shadow

            உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் அயர்லாந்து சீன அணிகள் இடையேயான ஆட்டம் 1 க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 14-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று, அயர்லாந்து சீன அணிகள் மோதிய இரண்டாவது ஆட்டம் 1 க்கு1 என டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோலடிக்கவில்லை. பின்னர் இரண்டாம் பாதியில் 43 ஆவது நிமிடத்தில் சீன வீரர் குவோ ஜின் அற்புதமாக கோலடித்தார். அதைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட அயர்லாந்து அணியின் வீரர் ஆலன் சோதெர்ன் 44 ஆவது நிமிடத்தில் கோலடித்து சமன் செய்தார்.
இதனால் இறுதியில் 1 க்கு 1 என ஆட்டம் டிராவில் முடிந்தது. முன்னதாக மாலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதின.
காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற உதவும் ஆட்டம் என்பதால் இரு அணிகளும் தொடக்கம் முதலே தீவிரமாக போராடின. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் அபாரமான ஆட்டத்துக்கு இங்கிலாந்து வீரர்களால் ஈடு தரமுடியவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணி 3 க்கு 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றனர்

இது தொடர்பான செய்திகள் :