சர்வதேச டென்னிஸ் சம்மேளனம்

Home

shadow


உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் பட்டியலில், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

உலகின் முக்கிய டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், 2-வது இடத்தில் இருந்து முன்னேறி, மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், மாட்ரிட் ஓபன் போட்டியின், கால் இறுதியில் வெளியேறியதால், ஒரு இடம் சரிந்து 2-வது இடத்தை பெற்றுள்ளார். அதே போல், ஜெர்மனி வீரர், அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 3-வது இடத்தில் நீடிக்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், 12 ஆவது இடத்தில் இருந்து, 18 ஆவது இடத்துக்கு இறங்கியிருக்கிறார்.  2007-ம் ஆண்டுக்குப் பிறகு, ஜோகோவிச் முதல் 15 இடங்களுக்கு வெளியே தள்ளப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், பெண்கள் ஒற்றையர் தரவரிசைப்பட்டியலில்ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி  2-வது இடத்திலும்ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 3-வது இடத்திலும் உள்ளனர். ஒற்றையர் தரவரிசைப்பட்டியலில், இந்திய வீரர்களில், யுகி பாம்ப்ரி 8 இடம் சரிந்து 94-வது இடம் பிடித்துள்ளார். அதே போல், இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா 23-வது இடத்தில் நீடிக்கிறார். திவிஜ் சரண் 2 இடம் சரிந்து 44-வது இடத்தையும்,   லியாண்டர் பெயஸ் ஒரு இடம் பின்தங்கி 51-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள், அங்கிதா ரெய்னா 7 இடம் முன்னேறி 187-வது இடத்தையும், கர்மான் கவுர் 16 இடங்கள் உயர்ந்து, 254-வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

இது தொடர்பான செய்திகள் :