சென்னை  ஹாக்கி போட்டி  

Home

shadow

மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள்,  இன்று முதல் வரும் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கான மொத்தப் பரிசுத்தொகை ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள், இன்று தொடங்குகிறது. வரும் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப், வருமான வரித்துறை, கலால் துறை, தமிழ்நாடு காவல்துறை, சென்னை மாநகர காவல்துறை, உள்ளிட்ட அணிகள் பங்கேற்கவுள்ளன. இப்போட்டி நாக்-அவுட் முறையில் நடத்தப்படும் என்றும், வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்தப் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :