சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Home

shadow

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15 வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

மும்பையில், நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில்டாஸ் வென்ற சென்னை பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எட்டியது.சென்னை தரப்பில் தீபக் சாஹர், மோஹித் சர்மா, இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா, பிராவோ தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். இதையடுத்து, 171 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய சென்னை ஆரம்பம் முதலே தடுமாறியது. தொடக்க வீரர் வாட்சன் 5 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த அம்பட்டி ராயுடு டக் அவுட்டானார். ரெய்னா 16 ரன்கள் அடிக்க, அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 58 ரன்கள் விளாசினார். இறுதியில் சென்னை அணி  20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வியடைந்தது.  

 

 

 

 

இது தொடர்பான செய்திகள் :