சென்னை – சர்வதேச இளையோர் குத்துச் சண்டை போட்டி

Home

shadow


      சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச இளையோர் குத்துச் சண்டை போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.


     சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சென்னை சர்வதேச இளையோர் குத்துச் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. 


     இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். 


     இந்த போட்டி ஆண், பெண் என இருபிரிவுகளில் நடைபெற்று வருகிறது.  இதில் ஆண்கள் பிரிவின் காலிறுதி சுற்றில் பல்வேறு எடைப்பிரிவுகளில் தமிழ் செல்வன், ராமகிருஷ்ணன் மற்றும் சக்திவேல் ஆகிய வீரர்கள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளனர். 


    இதேபோல்  பெண்கள் பிரிவில் சந்தியா, பவித்ரா மற்றும் ஹர்ஷா ஹுசைன்  ஆகிய வீராங்கனைகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளனர். 


   அரையிறுதிச் சுற்று மற்றும் இறுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெறுகிறது. வெற்றி பெரும் வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்படும். 

இது தொடர்பான செய்திகள் :