சென்னை - டென்னிஸ் போட்டி 

Home

shadow

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான டென்னிஸ் சீரிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில், ஆஸ்டின், ஸ்வீட்டின் ஆகியோர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றனர்.  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் சென்னை டென்னிஸ் மையம் சார்பில் 19ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் டென்னிஸ் சீரிஸ் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.  நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவில், ஆஸ்டின், ஸ்வீட்டின் அணி 6க்கு 6, 6க்கு 4, 12க்கு 10 என்ற புள்ளிக்கணக்கில் சாய்பியா, ஜெனிபர் ஆகியோர் வீழ்த்தி வெற்றி பெற்றனர். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :