சென்னை - நீச்சல் போட்டி 

Home

shadow

சென்னையில், முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி இன்று தொடங்குகிறது.

சென்னை வேளச்சேரி நீச்சல் வளாகத்தில், 21 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டியில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நீச்சல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில், 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், பிரெஸ்ட் ஸ்ட்ரோக், பட்டர்பிளை ஸ்ட்ரோக் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரமும் வழங்கப்படவுள்ளன

 

இது தொடர்பான செய்திகள் :