சென்னையில் தடகளம் இறுதிப் போட்டி

Home

shadow


சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் மேற்கு சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னையில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் 4 பிரிவுகளில் நடத்தப்பட்டன. இதில் நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் 36 பிரிவுகளாக நடத்தப்பட்டன. அதன்படி, முதல் பிரிவில் வட சென்னையைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், 2வது பிரிவில் தென் சென்னை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளும், 3வது பிரிவில் மத்திய சென்னை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், 4வது பிரிவில் பங்கேற்ற மேற்கு சென்னை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று நடைபெற்ற போட்டியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிலையில், சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சான்றிதழ்களும்பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

இது தொடர்பான செய்திகள் :