சென்னையில்   தடகளப் போட்டி  

Home

shadow

சென்னையில், தமிழ்நாடு மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தென் சென்னை மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகளப் போட்டி இன்று தொடங்கியது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், வட சென்னை மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகளப் போட்டி, சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தென் சென்னை மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகளப் போட்டி, சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று காலை தொடங்கியது. நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய 36 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் சுமார் ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். கிழக்கு சென்னை மாவட்டத்திற்கு நாளையும், மேற்கு சென்னை மாவட்டத்திற்கு மார்ச் 1ஆம் தேதியும் தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :