சென்னையில் வலுதூக்கும் போட்டி  

Home

shadow

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஃபெடரேஷன் கோப்பைக்கான வலுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை கதீஜா பேகம் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்முவில் கடந்த 16ஆம் தேதி முதல் தேசிய அளவிலான ஃபெடரேஷன் கோப்பைக்கான வலுதூக்கும் போட்டி நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் 75 கிலோ எடை பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கதீஜா பேகம், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். முதலிடத்தை ஹரியாணாவைச் சேர்ந்த ரஷ்மிதா வென்றார். தமிழகம் சார்பில் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்ற கதீஜா பேகம், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 2016இல் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழக வலுதூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், 2017இல் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பான செய்திகள் :