செர்பியாவில் இந்தியா வெற்றி

Home

shadow

செர்பியாவில் நடைபெற்ற 4 நாடுகள் இடையேயான கால்பந்து போட்டியில், இந்தியாவின் ஜூனியர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தியா, செர்பியா, ஜோர்டான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இடையேயான கால்பந்து போட்டி செர்பியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியின் கடைசி லீக் போட்டியில், இந்திய அணி 4 க்கு 2 என்ற கோல் கணக்கில் தஜிகிஸ்தான் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இந்தப் போட்டிகளில், இந்திய அணி முதல் ஆட்டத்தில் செர்பியாவுடன், சமன் செய்தது. 2-வது ஆட்டத்தில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில், ஜோர்டானை தோற்கடித்தது குறிப்பிடத் தக்கது. 

இது தொடர்பான செய்திகள் :