ஜிபி சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 1 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளது

Home

shadow

ஜிபி சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 1 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள்  கிடைத்துள்ளது.

பின்லாந்தின் ஹெல்சிங்கியில் நடைபெற்று வரும் ஜிபி சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 1 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.  நேற்று மாலை நடைபெற்ற இறுதிச் சுற்று ஆட்டங்களில் 56 கிலோ பிரிவில் சக வீரர் முகமது ஹுஸ் முதீனை வீழ்த்தி தங்கம் வென்றார் கவிந்தர் சிங் பிஷ்ட்.  இதேபோல் ஷிவ தாப்பா 60 கிலோ பிரிவு இறுதியில் 1 க்கு 4 என உள்ளூர் வீரர் அர்ஸலனிடம் தோல்வியுற்று வெள்ளி வென்றார். அதே போல் கோவிந்த் சஹானி 2 க்கு 3 என்ற புள்ளிக்கணக்கில் தாய்லாந்து வீரர் பன்மோதிடம் தோல்வியுற்றார்.  69 கிலோ பிரிவில் தினேஷ் டாகரும் வெள்ளி வென்றார். ஷிவ தாப்பா, முகமது ஹூஸ்முதீன், கோவிந்த் சஹானி, தினேஷ் டாகர் உள்ளிட்டோர் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :