ஜெர்மனியில் கால்பந்து வீரர் மரியோ

Home

shadow


ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஜெர்மனி அணியின் நட்சத்திர வீரரான மரியோ கோட்சே பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32 அணிகள் பங்கேற்கும் 21-ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி, வரும் ஜூன் மாதம் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான ஜெர்மனி அணியின் 27 வீரர்கள் கொண்ட உத்தேசப் பட்டியலை பயிற்சியாளர் ஜோசிம் லோ வெளியிட்டார். அந்தப் பட்டியலில் ஜெர்மனியின் நட்சத்திர வீரர் மரியோ கோட்சே இடம்பெறாதது அந்நாட்டு கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி அணி 2014-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது. இதில் கூடுதல் நேரத்தில் வெற்றிக்குரிய கோலை அடித்த நடுகள வீரர்தான் 25 வயதான மரியோ கோட்சே. ஆனால், அவர் தற்போது போதிய அளவுக்கு உடல் தகுதியோடு இல்லாததால் அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக பயிற்சியாளர் ஜோசிம் லோ விளக்கம் அளித்துள்ளார். ஜெர்மனி அணி, கடந்த உலகக் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த மரியோ கோட்சே, இந்த முறை நீக்கப்பட்டுள்ளது அந்நாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அணியின் சக வீரர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இது தொடர்பான செய்திகள் :