டி.என்.பி.எல் – திண்டுக்கல், கோவை அணி வெற்றி

Home

shadow


டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய பிளேஆப் சுற்றில் 75 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் மற்றோரு ஆட்டத்தில் காரைக்குடி காளை அணியை வீழ்த்தி கோவை அணி இரண்டாவது பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் பிளேஆப் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற முதல் பிளேஆப் சுற்றில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகள் மோதின. டாஸ் வென் மதுரை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தலில் களம் இறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. ஹரி நிஷாந்த் 57 ரன்களும், ஜெகதீசன் 43 ரன்களும், ஆர் விவேக் 54 ரன்களும் சேர்த்தனர். 204 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி வீரர்கள் திண்டுக்கல் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 19 புள்ளி 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த மதுரை அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகள் மோதின. இதில் டாஸ் வென் காரைக்குடி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் குவித்தது.  இதனை தொடர்ந்து களமிறங்கிய காரைக்குடி அணி 20  ஓவர்கள் முடிவில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்த்து. 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற

இது தொடர்பான செய்திகள் :