டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஒத்திவைக்கப்பட்ட ஆட்டங்கள் இன்று நடைபெறவுள்ளது

Home

shadow

                     டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஒத்திவைக்கப்பட்ட திண்டுக்கல்-மதுரை, கோவை-காரைக்குடி அணிகள் மோதும் 2 ஆட்டங்கள் நத்தத்தில் இன்று நடைபெறவுள்ளது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் ஒத்தி வைக்கப்பட்ட 2 ஆட்டங்களும் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது. மாலையில் நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணியும், இரவு நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-காரைக்குடி காளை அணியும் மோதுகின்றன. 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நெல்லை, திண்டுக்கல், சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் ஆட்டங்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. முதலாவது தகுதி சுற்று ஆட்டம் நெல்லையில் நேற்று முன்தினம் இரவும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நத்தத்தில் நேற்று இரவும் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், திமுக.தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக இந்த 2 ஆட்டமும் தள்ளி வைக்கப்படுவதாக டி.என்.பி.எல். நிர்வாகம் அறிவித்தது. ஒத்திவைக்கப்பட்ட இந்த 2 ஆட்டங்களும், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான செய்திகள் :