டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை முந்தி ரோகித் சர்மா முதலிடம்

Home

shadow

                 டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை முந்தி சாதனை படைத்தார் ரோகித் சர்மா.

20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் 2 ஆயிரத்து 102 ரன்கள் குவித்து விராட் கோலி முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில், இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் புதிதாக கட்டப்பட்ட அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் முதலில் ஆடிய இந்தியா, ரோகித் சர்மாவின் அபாரமான சதத்தால் 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி விராட் கோலியை முந்தினார். தற்போது 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், 20 ஓவர் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :