டெஸ்ட் கிரிக்கெட்

Home

shadow

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை, இந்திய அணி தடுமாற்றத்துடன் தொடங்கியுள்ளது. 

 

          தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் டிவிலியர்ஸ் மற்றும் டூபிளஸி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டிவில்லியர்ஸ் 65 ரன்களுக்கும், டுபிளஸி 62 ரன்களும் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 286 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

          இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க முதலே அதிர்ச்சி காத்திருந்தது. முரளி விஜய், தவான், கேப்டன் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 16 ரன்களுடனும், ரோகித் சர்ம ரன் கணக்கை தொடங்காமலும் களத்தில் உள்ளனர். 2 நாள் ஆட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. 

இது தொடர்பான செய்திகள் :