டெஸ்ட் கிரிக்கெட்.

Home

shadow

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது.

 

          வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணிக்கு இந்த தொடர் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

         அதேசமயம் இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பதால், இந்த முறை தொடரை கைப்பற்றுமா? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :