திருச்சி - ஹாக்கி போட்டி  

Home

shadow

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில், ஆண்கள் பிரிவில் அரியலூர் அணியும், பெண்கள் பிரிவில் ஈரோடு அணியும் வெற்றி பெற்றன. 

முதலமைச்சர் கோப்பாக்கான விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை ஹாக்கி போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது. கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்த போட்டியில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 30 அணிகளும் பங்கேற்று விளையாடின. இதில் புள்ளிகள் அடிப்படையில் ஆண்கள் பிரிவில் அரியலூர் அணியும், பெண்கள் பிரிவில் ஈரோடு அணியும் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளன. முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இது தொடர்பான செய்திகள் :