திருவண்ணாமலையில் நடைபெற்ற மண்டல அளவிலான வளைகோல் போட்டி

Home

shadow

                      திருவண்ணாமலையில் நடைபெற்ற மண்டல அளவிலான வளைகோல் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருவண்ணாமலையில் வேலூர், காட்பாடி, திருவண்ணாமலை, தண்டராம்பட்டு ஆகிய கோட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான வளைகோல் போட்டிகள் நடைபெற்றன. 


17, 19 வயது என இரு பிரிவுகளில் மொத்தம் 8 பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 


17 வயது பிரிவில், தண்டராம்பட்டு அணியும், 19 வயது பிரிவில் வேலூர் காட்பாடி தொன்போஸ்கோ அணியும் வெற்றி பெற்றன. 


வெற்றி பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான செய்திகள் :