தெற்காசிய கோப்பைக்கான மகளிர் கால்பந்து போட்டி: நேபாளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

Home

shadow

நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய மகளிர் கால்பந்து போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

6 அணிகள் பங்கேற்ற தெற்காசிய மகளிர் கால்பந்து போட்டி நேபாளத்தில் கடந்த 12-ஆம் தேதி முதல் தொடங்கி நடைப்பெற்று வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 26-வது நிமிடத்தில் இந்தியாவின் தலிமா சிப்பர் முதல் கோல் அடித்து கோல் கணக்கை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நேபாள் அணியின் பண்டாரி 33-வது நிமிடத்தில் கோல் அடித்து புள்ளி கணக்கை சமன் செய்தார். இதனையடுத்து இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்க தீவிர முயற்சி கொண்டனர். இறுதியில் ஆட்டத்தின், 63-வது மற்றும் 78-வது நிமிடங்களில் இந்தியாவின் கிரேஸ் மற்றும் தமங் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தனர். இதன் மூலம் 3-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிப் பெற்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. தொடர்ந்து 5-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

 

இது தொடர்பான செய்திகள் :