தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை போட்டி: வங்க தேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

Home

shadow

நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தொடர்ந்து 5-வது முறையாக இந்திய மகளிர் கால்பந்து அணி தகுதிப் பெற்றுள்ளது.

நேபாளத்தின் பீரட் நகரில் தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை போட்டிநடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும் - வங்கதேசமும் மோதின. ஆட்டம் தொடங்கியதும் இந்தியாவின் தலிமா சிப்பர் முதல் கோல் அடித்து கோல் கணக்கை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்திய வீராங்கனைகள் மணிஷா, இந்துமதி, சஞ்சு ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்து அணியின் புள்ளி கணக்கை உயர செய்தனர். மறுபக்கம் வங்கதேச அணியால் கோல் ஏதும்  போட முடியவில்லை. இறுதியில் 4-க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்ற இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள இந்திய அணி, நாளை  நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் நேபாளத்துடன் மோதவுள்ளது.

 

இது தொடர்பான செய்திகள் :