தேசிய அளவிலான வில்வித்தை உள்ளரங்கு போட்டி 13 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழக மாணவ மாணவிகள்

Home

shadow

                           தேசிய அளவிலான வில்வித்தை உள்ளரங்கு போட்டியில் கரூர் மாவட்ட மாணவ மாணவிகள் 13 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்,


கடந்த டிசம்பர் மாதம் 27, 28., 29 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான வில்வித்தை உள்ளரங்கு போட்டிகள் சென்னையை அடுத்த மஹேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மகராஷ்டிரா், கர்நாடக, கேரளா, ஜம்மு காஷ்மீர்., உத்திரகாண்ட் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருந்து 750 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர்வயது வாரியாக பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் பீல்டு ஆர்ச்சரி அசோஷியேசன் ஆப் கரூர்  சார்பில் 10, 14, 19, வயது மற்றும் சீனியர் ஆகிய 4 பிரிவுகளில் 20 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில் 8 பேர் தங்கப்பதக்கங்களும்., 3 பேர் வெள்ளிப்பதக்கங்களும், 2 பேர் வெண்கலப்பதக்கங்களும் பெற்று கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். இந்த மாணவர்களை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பாராட்டியதோடு, அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில்., பீல்டு ஆர்ச்சரி அசோஷியேசன் ஆப் கரூர் டிஸ்டிரிக்ட் பயிற்சியாளர்  ரவிசங்கர்., மில்லினியம் சி.பி.எஸ். பள்ளி தளாளர்  கே.சீனிவாசன்., ஆர்ச்சரி அசோசியேஷன் ஆதரவாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான செய்திகள் :