தேசிய எறிபந்து போட்டி

Home

shadow

 

மத்தியப் பிரதேசம் போபாலில் நடைபெற்ற தேசிய எறிபந்து போட்டியில் தமிழக ஆடவர் மற்றும் மகளிர் இரு அணிகளும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் தேசிய எறிபந்து போட்டி கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த அணிகள் விளையாடின. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழக மகளிர் அணி 15க்கு 6, 13க்கு 15, 15க்கு 10 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.  இதன்மூலம் தமிழக மகளிர் அணி தொடர்ந்து 10ஆவது முறையாக தங்கப் பதக்கத்தை தன்வசமாக்கியுள்ளது.

 இதேபோல், ஆடவர் இறுதிப் போட்டியில் தமிழக அணியும், டெல்லி அணியும் மோதவிருந்தன. ஆனால் இடைவிடாத மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதால், தங்கத்தை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன. கோவா அணி 3வது இடத்தை கைப்பற்றியுள்ளது. தங்கம் வென்றுள்ள தமிழக மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் நாளை சென்னை திரும்பவுள்ளதாக தமிழ்நாடு எறிபந்து சங்க செயலாளர் பாலவிநாயகம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான செய்திகள் :