தேசிய கைப்பந்து   அரையிறுதியில் தமிழக அணிகள்  

Home

shadow

கோழிக்கோட்டில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில், தமிழக ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் 66-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு  நடைபெற்ற ஆடவர் காலிறுதிப் போட்டியில், தமிழக அணியும், ஆந்திர அணியும் மோதின.  இதில் 3க்கு 2 என்ற செட் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.  மகளிர் பிரிவில், தமிழக அணி 3க்கு பூஜ்யம் என்ற நேர் செட்களில், தெலுங்கானா அணியை எளிதில் வீழ்த்தியது. இந்த வெற்றியால் தமிழக மகளிர் அணியும், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், தமிழக மகளிர் அணி, கேரளா அணியுடனும், சர்வீசஸ் ஆடவர் அணி, ரயில்வே அணியுடனும் மோதுகின்றன. நாளை நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதிப் போட்டியில், ரயில்வே மகளிர் அணி, மஹாராஷ்டிராவுடனும், தமிழக ஆடவர் அணி, கேரளாவுடனும் மோதுகின்றன.

இது தொடர்பான செய்திகள் :