தேசிய கைப்பந்து போட்டி  

Home

shadow

கேரள மாநிலம், கோழிக்கோட்டில், ஆடவர் மற்றும் மகளிருக்கான 66வது தேசிய கைப்பந்து போட்டி இன்று தொடங்குகிறது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கிருஷ்ணமேனன் உள்விளையாட்டரங்கில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 66வது தேசிய கைப்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. இதில், ஆடவர் பிரிவில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள், ரயில்வே மற்றும் சர்வீசஸ் என 28 அணிகளும், மகளிர் பிரிவில் 24 அணிகளும் பங்கேற்கின்றன. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவுள்ள துவக்க லீக் ஆட்டத்தில் தமிழக ஆடவர் அணி, சர்வீசஸ் அணியுடனும், பெண்கள் அணி, ஆந்திரப்பிரதேசத்துடனும் மோதுகின்றன. இப்போட்டியில் காலிறுதியில் தகுதிபெறும் அணிகள், மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான பெடரேஷன் கோப்பைக்கான போட்டிக்கு தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :