தேசிய கைப்பந்து போட்டி 

Home

shadow

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்று வரும் தேசிய கைப்பந்து போட்டியின் இரண்டாவது லீக் ஆட்டத்தல் தமிழக ஆடவர் அணி 3க்கு பூஜ்யம் என்ற நேர் செட் கணக்கில் ஹிமாச்சலபிரதேச அணியை எளிதாக வீழ்த்தியது. 

இந்திய கைப்பந்து சம்மேளனம் சார்பில்;, 66-வது தேசிய சீனியர் கைப்பந்து போட்டி கோழிக்கோட்டில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தமிழக ஆடவர் அணி, நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தல் தமிழக ஆடவர் அணி 3க்கு பூஜ்யம் என்ற நேர் செட் கணக்கில் ஹிமாச்சலபிரதேச அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறவுள்ள 3வது லீக் ஆட்டத்தில், தமிழக ஆடவர் அணி ரயில்வே அணியுடன் மோதுகிறது. 

மகளிர் பிரிவில், 2-வது லீக் ஆட்டத்தில் தமிழக அணி, ரயில்வே அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரயில்வே அணி 26க்கு 24, 25க்கு 11, 25க்கு 16 என்ற நேர்செட்டில் ரயில்வே அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழக மகளிர் அணி, ஆந்திர அணியை வீழ்த்தி இருந்தது. இன்று நடைபெறவுள்ள 3வது லீக் ஆட்டத்தில், தமிழக மகளிர் அணியும் மேற்கு வங்க அணியும் மோதுகின்றன. 

இது தொடர்பான செய்திகள் :