தேசிய சீனியர் கைப்பந்து போட்டி  

Home

shadow

கோழிக்கோட்டில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப்பில் இன்று நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் தமிழக ஆடவர் அணி ஆந்திர அணியுடனும், தமிழக மகளிர் அணி தெலுங்கானாவுடனும் மோதுகின்றன.

66-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, கேரளா கோழிக்கோட்டில் கடந்த 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறவுள்ள காலிறுதிப்போட்டியில், தமிழக ஆடவர் அணி, ஆந்திர அணியுடனும், கேரளா, ஹரியானா அணியுடனும், பஞ்சாப், சர்வீசஸ் அணியுடனும், ரயில்வே, கர்நாடக அணியுடனும் மோதுகின்றன. மகளிர் பிரிவில், தமிழகம், தெலுங்கானா அணியுடனும், ரயில்வே, கர்நாடக அணிடனும், மஹாராஷ்டிரா, மேற்கு வங்க அணியுடனும், கேரளா, ஹரியானா அணியுடனும் மோதுகின்றன. காலிறுதியில் வெற்றி பெறும் அணிகள் நாளை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகின்றன.

இது தொடர்பான செய்திகள் :