தேனி   கோகோ போட்டி

Home

shadow

தேனியில் பெண்களுக்கான மாநில அளவிலான கோ கோ போட்டி நடைபெற்றது.இதில் 29 மாவட்ட அணிகள் பங்கேற்றன.

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் உள்ள ரோஸி தனியார் பள்ளியில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 70வது பிறந்த நாளை முன்னிட்டு ரோஸி பள்ளியும், தேனி மாவட்ட கோ கோ விளையாட்டு கழகமும் இணைந்து 6ம் ஆண்டு, பெண்களுக்கான 3 நாட்கள் கோ கோ போட்டி நடைபெற்றது.

இதில் 29 மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் அணிகள் சிறப்பாக விளையாடின. 3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில், 4வது இடத்தை சிவகங்கை மாவட்ட அணியும், 3வது இடத்தை கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் அணியும், 2வது இடத்தை சென்னை அணியும், முதல் இடத்தை தேனி ரோஸி பள்ளி அணியும் பிடித்தன போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தேனி மாவட்ட கோ கோ விளையாட்டு தலைவர்,

ரவிந்திரநாத்குமார் பாராட்டு சான்றிதழ்களையும்,  பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.

இது தொடர்பான செய்திகள் :