நியூலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது

Home

shadow

         நியூலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரையும் இழந்தது.


நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் வந்தது. அணியின் ரன்கள் 80 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். செய்பெர்ட் 25 பந்தில் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் மற்றும்  கிராண்ட்ஹோம் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதனால் இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.   இதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே சோகமாக அமைந்தது. துவக்க வீரர் தவான் 5 ரன்கள் எடுத்து முதல் ஓவரிலேயே நடையை கட்டினார். பின்னர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கர் சிறப்பாக ஆடினார். அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார் விஜய் சங்கர். பின்னர் வந்த ரிஷப் பண்ட் , பாண்டியா அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.  பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் - க்ருனால் பாண்டியா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடைசிவரை போராடினர். இருப்பினும் இந்தியாவால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 4 ரன்கள் வித்திசாயத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இது தொடர்பான செய்திகள் :