நெதர்லாந்து   டென்னிஸ்

Home

shadow

நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியில், சுவிட்சர்லாந்தின் ரோஜர்பெடரர், பட்டம் வென்றார் இது அவரது டென்னிஸ் வாழ்வில் பெற்ற 97 வது பட்டமாகும். நெதர்லாந்தில் கடந்த சில தினங்களாக ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் முல்நிலை வீர்ரும்  சுவிட்சர்லாந்தை சேர்ந்தவருமான ரோஜர்பெடரர், தரவரிசையில் 2 வது இடத்தில் உள்ள பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.  நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6 க்கு 2, 6 க்கு 2 என்ற நேர் செட்களில், டிமிட்ரோவை வீழ்த்தினார். அவருடன் இதுவரை மோதிய 7 போட்டிகளிலும் ரோஜர்பெடரர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :