பரபரப்பான போட்டியில் டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி

Home

shadow

12-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.

டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 24 ரன்களில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அடுத்து வந்த . ஸ்ரேயாஸ் அய்யரும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிகர் தவானும் 51 ரன்களில் ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில், வாட்சன் மற்றும் ரெய்னா அபாரமாக ஆடி சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் சென்னை அணி 19 புள்ளி 4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

 

இது தொடர்பான செய்திகள் :