பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டித் தொடர்பாக இந்திய அணியின் முடிவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: காம்பிர்

Home

shadow

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியை இந்தியா புறக்கணித்தால், ஒட்டுமொத்த மக்களும் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெஷ்ய்- முகமது பயங்கரவாத அமைப்பு ஒருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, உலகக்கோப்பையில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடக்கூடாது என்ற கோரிக்கை வலுத்தது. இது தொடர்பாக பிசிசிஐ விடுத்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்தது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்பீர்,  40 உயிர்களைவிட 2 புள்ளிகள் பெரிய விஷயம் அல்ல என்றும், இறுதிப் போட்டியில் மோதும் சூழ்நிலை இருந்தாலும் இரண்டு புள்ளிகளை இழக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் காம்பிர் தெரிவித்துள்ளார். புல்வாமாவில் நடந்த தாக்குதலை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த அவர், பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தை புறக்கணிப்பது கடினம் எனவும், ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாடாமல் இருப்பது போல் ஆசிய கோப்பையிலும் விளையாடாமல் இருக்க முடியும் என்றும் கூறினார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடாது என்று முடிவு எடுத்துவிட்டால், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோத வேண்டும் என்றாலும், அதை புறக்கணிக்க வேண்டும் என்றும் மக்கள் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு எடுத்துவிட்டால், பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகள் விட்டுக்கொடுக்க ஒவ்வொருவரும் மனதளவில் அதை ஏற்றுக் கொள்ள தயாராகி கொள்ள வேண்டும் என கூறிய கம்பீர், இரண்டு புள்ளிகளை விட்டுக்கொடுப்பதால் நாம் அரையிறுதிக்கு முன்னேற முடியாத நிலை கூட ஏற்பட்டால் எந்தவொரு மீடியாக்களும் இந்திய அணி மீது குற்றும் சுமத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.

 

இது தொடர்பான செய்திகள் :