பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை

Home

shadow


        
                   உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய  இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்து, நாட்டிங்காம்மில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியும், சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் 6ஆவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 10 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் மோசமாக இருப்பது அதற்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.
ஒருநாள் போட்டிகளுக்கான பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் கிறிஸ் கெய்ல், ஆண்ரே ரசல், ஜேசன் ஹோல்டர் என அதிரடி பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்கவுள்ளதால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இதுவரை 10 முறை இந்த அணிகள் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 முறையும், பாகிஸ்தான் அணி 3 மூன்று முறையும் வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :