பாரா ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியா மேலும் 3 தங்கம்

Home

shadow

 

இந்தோனேஷியாவில் நடைபெற்ற வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா மேலும் 3 தங்கங்களைக் கைப்பற்றியுள்ளது.


பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான கிளப் துரோ போட்டியில் இந்திய வீராங்கனை ஏக்தா பியான் 16 புள்ளி பூஜ்யம் 2 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.  இதேபோல், துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் மனிஷ் நார்வால் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.  

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் தாகுர் நாராயண் 14 புள்ளி பஜ்யம் 2 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். குண்டு எறிதலில் விரேந்தர், உயரம் தாண்டுதலில் ராம்பால், வட்டு எறிதலில் அனீஷ்குமார் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். மோனு சாங்காஸ், ஆனந்தன் குணசேகரன்,  சுந்தர்சிங் குர்ஜர், பிரதீப், ஜெயந்தி பெஹெரா ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர். இந்த போட்டியில் இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலத்துடன் மொத்தம் 28 பதக்கங்கள் வென்று 9-வது இடத்தில் உள்ளது. சீனா 78 தங்கம், 34 வெள்ளி, 29 வெண்கலத்துடன் 141 பதக்கங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது

இது தொடர்பான செய்திகள் :