பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரேநாளில் இந்தியா 3 தங்கப்பதக்கம் வென்றுள்ளது

Home

shadow

                                  இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 4 தங்கம், 6 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் 7-வது இடத்தில் உள்ளது.


இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில், 2-வது மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 

இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி 60 புள்ளி பூஜ்யம் ஒன்று மீட்டர் தூரம் எறிந்து புதிய உலக சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கம் வென்றார். இவர் காலில் குறைபாடு கொண்டவர்.  


பெண்களுக்கான ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ராஜூ ரக்‌ஷிதா 5 நிமிடம் 40 புள்ளி 64 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இவர் குறைவான கண்பார்வை கொண்டவர் ஆவார். 


நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் இந்திய வீரர் ஜாதவ் சுயாஷ் நாராயண் 32 புள்ளி 72 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பெங்களூருவை சேர்ந்த இவர் 2 கைகளையும் பாதி இழந்தவர். 


நீச்சலுக்கு கை மிகவும் அவசியம் என்றாலும், அதனையும் சமாளித்து அவர் சாதித்து காட்டியுள்ளார். நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கப்பதக்கம் உள்பட 11 பதக்கங்களை வென்றது. 


பெண்களுக்கான ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ராதா வெங்கடேசும், ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை ரம்யா சண்முகமும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் இந்தியா 4 தங்கம், 6 வெள்ளி, 11 வெண்கலப்பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. சீனா 44 தங்கம், 18 வெள்ளி, 18 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :