புரோ கபடி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸட அணி வெற்றி

Home

shadow

 

புரோ கபடி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸட அணி வெற்றி பெற்றது.


6-வது புரோ கபடி லீக் திருவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்சுடன் மோதின. தொடக்கத்தில் சற்று ஆதிக்கம் செலுத்திய தமிழ்தலைவாஸ் அணி அதன் சற்று முன்னேறியது. 8க்கு 8 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்த பிறகு தெலுங்கு அணியின் கை மேலோங்கியது. முதல் பாதியில் 17க்கு 11 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் அணி அந்த முன்னிலையை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது. இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 28க்கு 33 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.  இன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டங்களில் மும்பை-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும், தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகளும் மோதுகின்றன. 

இது தொடர்பான செய்திகள் :