புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது

Home

shadow

                           புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை 38 க்கு 33 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.


6-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இறுதி சுற்றை எட்டின. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையே இறுதிப்போட்டி மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து குஜராத் அணி வீரர்கள் அபாரமாக ஆடி புள்ளிகளை குவிக்கத் தொடங்கினர். இதனால் முதல் பாதி முடிவில் 16 க்கு  9 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் குஜராத் வெற்றி பெற்று விடும் என அனைவரும் நினைத்தனர். ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், பெங்களூரு அணி அபாரமாக ஆடியது. அந்த அணியின் பவன் ஷெராவத் அதிரடியாக ஆடி 25 ரெய்டுகளில் 22 புள்ளிகள் எடுத்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.  இறுதியில், பெங்களூரு புல்ஸ் அணி 38 க்கு 33 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்சுன் ஜயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புரோ கபடி லீக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. 

இது தொடர்பான செய்திகள் :