புரோ கபடி ‘லீக்’ போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை உத்திரப்பிரதேச யோதா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது

Home

shadow

           புரோ கபடி லீக்போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை உத்திரப்பிரதேச யோதா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.


சென்னை ஜவஹர்லார் நேரு விளையாட்டரங்கில், 6-வது புரோ கபடி லீக்போட்டி நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற போட்டியில் பிபிரிவில் இடம்பெற்ற தமிழ் தலைவாஸ் மற்றும் உத்திரப்பிரதேச யோதா அணிகள் மோதின. முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது. ஆனால், 37க்கு 32 என்ற கணக்கில் உபி யோதா அணி வெற்றி பெற்றது. 


முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 4க்கு 18 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது. 


அதன்பின், கேப்டன் அஜய் தாகூர் மற்றும் அதுல் ஆகியோர் புள்ளிகள் பெற்றனர். 


இறுதியில், 37க்கு 32 என்ற கணக்கில் நெருங்கி வந்து தோல்வியை தழுவியது. இதையடுத்து, உத்திரப்பிரதேச யோதா அணி 37க்கு 32 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இது தொடர்பான செய்திகள் :