புரோ வாலிபால் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணி வீழ்த்தியது

Home

shadow

          புரோ வாலிபால் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் 3-க்கு 2 என்ற செட் கணக்கில் ஐதராபாத் அணியை கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணி வீழ்த்தியது.

முதலாவது புரோ வாலிபால் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் ப்ளாக் ஹவாக் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் 12-க்கு 15, 15-க்கு 11, 15-க்கு12, 15-க்கு 10, மற்றும் 14-க்கு 15 என்ற புள்ளிகள் கணக்கில். கொச்சி  அணி வெற்றி பெற்றது. கொச்சி அணியின் டேவிட் லீ ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று நடைபெறும் போட்டியில், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் மற்றும் கேலிகட் ஹீரோஸ் அணிகள் மோதுகின்றன.

இது தொடர்பான செய்திகள் :