புரோ வாலிபால் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்திய சென்னை ஸ்பார்டன்ஸ் அணி

Home

shadow

           புரோ வாலிபால் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் 4-க்கு 1 என்ற செட் கணக்கில் ஐதராபாத் அணியை சென்னை ஸ்பார்டன்ஸ் அணி வீழ்த்தியது.

முதலாவது புரோ வாலிபால் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ்ப்ளாக் ஹவாக் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் 15-க்கு 12, 15-க்கு 12, 15-க்கு11, 15-க்கு 10, என முதல் 4 சுற்றுகளை கைப்பற்றிய சென்னை அணி 5-வது சுற்றை  மட்டும் 13-க்கு 15 என இழந்தது. இதன் மூலம் 4-க்கு 1 என்ற செட் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னை அணியின் நவீன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று நடைபெறும் போட்டியில், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் மற்றும் ப்ளாக் ஹவாக் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இது தொடர்பான செய்திகள் :