பெங்களூரு அணி நேற்று அபார வெற்றி

Home

shadow


பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல், லீக் போட்டியில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்துாரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடி பஞ்சாப் அணி, பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் பஞ்சாப் அணி  15.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணி 8.1 ஓவரில் இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இது தொடர்பான செய்திகள் :