பெங்களூருவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து அரையிறுதி ஆட்டம் - 3க்கு பூஜ்யம் என்ற புள்ளி கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தியது பெங்களூரு அணி

Home

shadow

ஐஎஸ்எல் கால்பந்து லீக் 2019 போட்டியின் இறுதிச் சுற்றுக்கு பெங்களூரு எஃப்சி அணி இரண்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது.

 முதல் அரையிறுதி ஆட்டத்தில் பெங்களூரு - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. கவுகாத்தியில் நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வென்றிருந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட ஆட்டம் பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்றது. இரண்டாம் பாதிஆட்டத்தில் பெங்களூரு அணி தனது ஆதிக்கத்தை தீவிரப்படுத்தியது. இதன் பலனாக பெடார்  72-ஆவது நிமிடத்திலும்  87-ஆவது நிமிடத்தில் திமாஸும்  கோலடித்தார். இதனையடுத்து ஆட்டம் முடிய கூடுதல் நேரத்தில் 2 நிமிடங்களே இருந்த நிலையில் கேப்டன் சுனில் சேத்ரி அற்புதமாக கோலடித்தார். இதனால் 3 க்கு  பூஜ்ஜியம் என வென்றது பெங்களூரு. அதிக கோல் சராசரி காரணமாக தொடர்ந்து 2-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்தது பெங்களூர் அணி.

 

இது தொடர்பான செய்திகள் :