பேட்மிண்டன் உலகத் தர வரிசைப் பட்டியலில் இந்திய வீரர் வீராங்கனைகள் முன்னிலை

Home

shadow

       பேட்மிண்டன் உலகத் தர வரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 5-வது இடத்தையும், சாய்னா 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

உலக பேட்மிண்டன் பெடரேசன் நேற்று வெளியிட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிடாம்பி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.  7-வது இடத்தில் இருந்த ஸ்ரீகாந்த் கிடாம்பி, கடந்த வாரம் நடைபெற்ற மலேசி ஓபன் தொடரில் அரையிறுதி வரை முன்னேறியிருந்தார். இதனால் இவர் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து 3-வது இடத்திலேயே நீடிக்கிறார். சாய்னா நேவால் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :