பொல்லார்ட்டின அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

Home

shadow

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  பொல்லார்ட்டின அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் இதையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல் களமிறங்கினர். முதலில் பொறுமையாக ஆடிய இருவரும் பின்னர் தங்களது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக ஆடிய கெயில் 36 பந்துகளில் 7 சிச்கர், 3 பவுண்டரியுடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் மறுப்புறம் நிலைத்து நின்று ஆடிய கே.எல் ராகுல் 63 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார். இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. பின்னர் 198 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. இன்னொரு புறம் கேப்டன் பொல்லார்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் இந்நிலையில் கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. அப்போது தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய பொல்லார்ட் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதனை தொடர்ந்து  மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது தொடர்பான செய்திகள் :