மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி திணறல்

Home

shadow


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. உடல் நலக்குறைவு காரணமாக இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் ஹர்மன்ப்ரீத் கெளர் கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. இந்திய அணியின் பூஜா வஸ்தரகர் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனஸ்ஸன் 4 விக்கெட்களை கைப்பற்றினார். 201 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கி உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :