மக்களவைத் தேர்தலுக்கு ஏற்ற வகையில் ஐ.பி.எல் போட்டிகளுக்கான போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது

Home

shadow

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு ஏற்ற வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் 12- ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தேதி தெரியாததால் ஐபிஎல் தொடருக்கான முதல் இரண்டு வாரத்துக்கான அட்டவணை முதலில் வெளியிடப்பட்டது. தற்போது தேதி தெரிந்துள்ளதால் அதற்கேற்படி முழு அட்டவணையையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதற்கேற்றபடி தேதிகளை மாற்றியமைத்து கொல்கத்தா அணிக்கான ஏழு ஹோம் போட்டிகளையும் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. முதல் ஐபிஎல் போட்டி வருகிற மார்ச் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்க்கொள்கிறது.

இது தொடர்பான செய்திகள் :