மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகள் பயிற்சி.

Home

shadow

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு  போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஜல்லிக்கட்டு என்றாலே உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். பாலமேடு, அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டி, கடந்த ஆண்டு பல்வேறு தடைகளை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. காளைகள் போட்டியில் வெற்றி பெறுவதற்காக அதன் உரிமையாளர்கள், அவற்றிக்கு நடை பயிற்சி, நீச்சல் பயிற்சி, மணல் மேட்டில் கொம்புகளை குத்துவது போன்ற பயிற்சிகளை அளித்து வருகின்றனர். மேலும் காளைகளுக்கு சத்தான உணவுகளும், மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று மாடுபிடி வீரர்களும் காளகளை அடுக்குவதற்காக பயிற்சி எடுத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து காளைகளையும் வாடிவாசல் வழியாக திறந்துவிட, போட்டி நேரத்தை அதிகரிக்க வேண்டும என்று மாடுபிடி வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பான செய்திகள் :