மயிலாடுதுறையில் யோகா, கராத்தே பயிற்சி போட்டி

Home

shadow


      மயிலாடுதுறை அருகே மாவட்ட அளவிலான யோகா மற்றும் கராத்தே பயிற்சி போட்டியில் திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே முட்டம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான யோகா மற்றும் கராத்தே பயிற்சி போட்டிகள் நடைபெற்றது. இதில் 16 பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, திறமைகளை வெளிப்படுத்தினர்.

யோகா போட்டியில் ஹலாசனம், சர்வாங்க ஆசனம், சிரசாசனம், சக்கராசனம், உச்சிஷ்டபாத ஆசனம், உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை மாணவ, மாணவிகள் செய்தனர். கராத்தே பயிற்சி போட்டியில் கட்டா, குபுடோ, குத்துச்சண்டை, நேரடி சண்டை உள்ளிட்ட பல்வேறு பயிற்சி நிலைகளை மாணவ மாணவிகள் செய்து காண்பித்தனர். இதை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்

இது தொடர்பான செய்திகள் :