மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா - திவிஜ் சரண் ஜோடி சாம்பியன்

Home

shadow

      மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா - திவிஜ் சரண் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.


மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. இதில் நேற்று நடந்த இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - திவிஜ் சரண் ஜோடி, இங்கிலாந்தின் லுக் பாம்பிரிட்ஜ் - ஜானி ஓமரா இணையை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆடிய போபண்ணா- திவிஜ் சரண் கூட்டணி 6 க்கு 3, 6 க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 38 வயதான போபண்ணா வென்ற 18-ஆவது சர்வதேச இரட்டையர் பட்டம் இதுவாகும். அதே போல் திவிஜ் சரணுக்கு இது 4 வது பட்டமாக அமைந்தது. இருவரும் 2018 ஆம் ஆண்டில் எந்த கோப்பையையும் வெல்லாத நிலையில், இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி அசத்தி இருக்கிறார்கள். 

 

இது தொடர்பான செய்திகள் :